விஷச்சாராயம் பதுக்கல்
திருக்கோவிலூர் அருகே விஷச்சாராயம் பதுக்கிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, இன்ஸ்பெக்டர்கள் லியோசார்லஸ், ராஜமன்னார் மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த சங்கர் மனைவி உஷா (வயது 44), செல்வராஜ் மனைவி நிர்மலா (45), மயில் வேல் மனைவி வள்ளி (45) மற்றும் செந்தில் முருகன் மனைவி ரங்கநாயகி (42) ஆகிய 4 பேரும் விஷ சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 லிட்டர் விஷ சாராயம், 40 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அழித்த னர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் இறந்த நிலையில் வீரபாண்டி கிராமத்தில் விஷ சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக 4 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.