ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் - ஜப்பான் குழுவினர் ஆய்வு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாம் கட்ட திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜப்பான் நாட்டு குழுவினர் கள ஆய்வு நடத்தினர்;

Update: 2024-03-12 04:27 GMT

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீரின் அளவை உயர்த்தி வழங்குவதற்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் . இந்த திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என  அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜப்பான் நாட்டு குழுவினர் கள ஆய்வு நடத்தினர்

Advertisement

இதனையடுத்து நேற்று மாலை ஒகேனக்கல்லில் தலைமை அலுவலகம் கட்ட தேவையான அரசு நிலம் ஒதுக்கீடு அரசு ஆணை பருவதனஅள்ளி கிராமத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான இடம் ஒதுக்கீடு அரசாணை பெறப்பட்டுள்ளது. புதிய திட்டத்திற்கு வனப்பகுதியில் குழாய்கள் அமைக்கும் பாதை நீரூற்று நிலையம் அமைப்பதற்கான முதல் கட்ட நிலை அனுமதியும் விரைவில் பெற உள்ளது. இத்திட்டம் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு கிராமபுற பகுதிகளுக்கு தற்போது குடிநீர் வழங்கும் அளவான நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 30 லிட்டரில் இருந்து 55 லிட்டர் ஆகவும் பேரூராட்சி பகுதிகளில் 50 லிட்டரில் இருந்து 20 லிட்டர் ஆகவும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு 70 லிட்டில் இருந்து 135 லிட்டராகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி,பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ,மற்றும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் ஆனந்த் மோகன்,ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார் சங்கரன் வட்டாட்சிய சுகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் கணேஷ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News