புனித பெரியநாயகி மாதா ஆலயம் தேர் திருவிழா!
ஆலங்குடி அருகே புனித பெரியநாயகி மாதா ஆலயம் தேர் திருவிழா நடைபெற்றது.;
Update: 2024-05-28 14:26 GMT
ஆலங்குடி அருகே புனித பெரியநாயகி மாதா ஆலயம் தேர் திருவிழா நடைபெற்றது.
ஆலங்குடி அருகே தவளைப்பள்ளத்தில் புனித பெரியநாயகி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று புனித பெரியநாயகி ஆலயத்தில் உள்ள 3 தேரில் செபஸ்தியார் மைக்கேல் சம்மனசு, அந்தோணியார் இஞ்ஞாசியார், பெரியநாயகி சூசையப்பர் ஆகியோர் சிலைகளை வைத்து தேர்பவனி நடைபெற்றது. பின்னர் தேர்களை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.