உள்துறை செயலாளர் மாற்றம்: மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு
Update: 2024-07-16 09:44 GMT
அமுதா ஐஏஎஸ்
தமிழ்நாட்டில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக உள்துறை செயலாளராக இருந்த பெ.அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம்.
சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமனம். தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பாலச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி நியமனம்.
அரியலுார் கலெக்டராக ரத்தினசாமி, கடலுார் கலெக்டராக சிபி ஆதித்ய செந்தில்குமார், கன்னியாகுமரி கலெக்டராக அழகு மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.