அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
பெரணமல்லூர் அருகே அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;
Update: 2024-04-14 11:10 GMT
அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட மோரக்கணியனூர் ஊராட்சியில் இன்று டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா அம்பேத்கர் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .இதில் நெடுங்குணம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மா.ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் மணியப்பன், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.