குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து மரியாதை
கோவில்பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு கிரீடம்சூட்டி ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-01-25 09:41 GMT
நாடு முழுவதும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கோவில்பட்டி லாயல்மில் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்து செல்வம் தலைமை வகித்தார்.பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜான்சிராணி வரவேற்றார். தலைமையாசிரியை செல்வி அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து மரியாதை செய்தார். பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போஸ்டர்களும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மெர்சி ராஜபுஷ்பம், அலாய்ஸ் ஜஸ்டின் வாஸ், வெங்கடாசலபதி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.