அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சேலத்தில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2024-02-03 10:52 GMT
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் அமைதி பேரணி பெரியார் சிலையிலிருந்து சென்றனர். பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மேயர் ராமச்சந்திரன், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News