தோட்டக்கலைத் துறை மானியத் திட்டங்கள்
திண்டுக்கல் மாவட்ட தோட்டகலைத்துறையின் சார்பில் செயல்படும் நலதிட்டங்களில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-22 14:19 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை, மலைத் தோட்டப் பயிா்களான பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மலா்கள் என சுமாா் 1.08 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக்கலைப் பயிா்கள் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளுக்கு தரமான மகசூல் கிடைப்பதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாவட்டத்தைச் சோந்த 90ஆயிரம் விவசாயிகள் பயனடைந்தனா். தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் வலைத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை 0451 2460522 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா் .