கிணற்றில் குதித்து ஒட்டல் ஊழியர் தற்கொலை

ஸ்ரீவைகுண்டம் அருகே கிணற்றில் குதித்து ஒட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். 

Update: 2024-03-21 01:26 GMT

 தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் பாண்டி (55). இவர் நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு வந்தவர் தனது மகனுடன் தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனம் உடைந்த பாண்டி வீட்டு பின்புறம் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சேரகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News