ஹோட்டல் மேலாளர் விபத்தில் உயிரிழப்பு
சென்னை பூந்தமல்லி அருகே ஹோட்டல் மேலாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Update: 2024-03-03 16:56 GMT
சென்னை பூந்தமல்லி அருகே கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு, 40. ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை, 'ஹோண்டா யூனிக்கான்' பைக்கில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நிலை தடுமாறி விழுந்தார். பின்னால் வந்த தனியார் பேருந்து பாபு மீது ஏறி இறங்கியது. இதில் பாபு அதே இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.