தீ விபத்தில் வீடு சேதம் - அதிமுகவினர் நிவாரண உதவி

Update: 2023-11-14 06:34 GMT

நிவாரண உதவி வழங்கிய அதிமுகவினர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கை ஊராட்சியில் உள்ள அலமேலு -நித்தியானந்தம் தம்பதியின் குடிசை வீடு நேற்று மின் கசிவு காரணமாக முழுமையாக எரிந்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜன், ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான புடவை ,வேட்டி, அரிசி, மளிகை பொருள், காய்கறிகள், பால் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான நிதி உதவி வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News