மழையில் சேதம் அடைந்த வீடு : உதவிக்கரம் நீட்டி அமைச்சர்!
வாலாஜா பகுதியில் நெசவாளருக்கு அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 11:42 GMT
அமைச்சர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி ஒத்தவாடை தெருவில் வசிக்கும் வத்சலா என்கிற நெசவாளரின் வீடு கடந்த 2023 டிசம்பர் 3ம் தேதி வடகிழக்கு பருவமழையின் போது இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 14ஆம் தேதி 4,00000 மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையினை அமைச்சர் காந்தி வழங்கினார். மேலும் அமைச்சரும் 3 லட்சம் தனது சொந்த நிதியை பயனாளிக்கு வழங்கியிருந்தார். அந்த நிலையில், 7 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதனை அமைச்சர் காந்தி இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.