வீடு வீடாக சென்று பாமகவினர் வாக்கு சேகரிப்பு
வாலாஜா நகருக்கு உட்பட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து பாமகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-11 13:22 GMT
வாக்கு சேகரிப்பு
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாலாஜா நகரத்திற்கு உட்பட்ட வார்டுகள் 18, 22 மற்றும் 24 ஆகிய வார்டுகளில் பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து வாலாஜாபேட்டை நகர பாமக செயலாளர் பூக்கடை எல் ஞானசேகர், பாஜக அரக்கோணம் தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாமகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் மக்களுக்கு விநியோகம் செய்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.