ஆட்சியர் தலைமையில் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அருகில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து கலெக்டர் சாந்தி தலைமையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் அருகில் தர்மபுரி பச்சமுத்து குழுமங்களின் சார்பில் உள்ள நர்சிங் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மருந்தியல் கல்லூரி மாணவிகள் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தர்மபுரி பச்சமுத்து கல்லூரிகளின் துணைத் தலைவர் சங்கீத்குமார்,மகளிர் திட்ட இயக்குனர், உதவி திட்ட இயக்குனர்கள் மற்றும் பச்சமுத்து கல்லூரிகளின் முதல்வர்கள் இன்பசேகர் ,சிவகாமி.ராதாகிருஷ்ணன் வட்டாட்சியர் ஜெயசெல்வன் மற்றும் வருவாய்த்துறை மகளிர் திட்டம் கல்லூரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்