திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மனித சங்கிலி
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது.;
Update: 2024-03-13 01:02 GMT
மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கழக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில், திருச்சி தென்னூர் சாலையில் இன்று(12-03-2024) மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில், பகுதி கழகச் செயலாளர் முஸ்தபா, மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட்பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர். இதேபோல,மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 பகுதி கழகங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.