விருத்தாச்சலத்தில் எம்எல்ஏ தலைமையில் மனித சங்கிலி போராட்டம்
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.;
Update: 2024-03-13 01:22 GMT
மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் விருத்தாசலம் அம்மா உணவகம் முன்பு மாபெரும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.