மார்ச் 12ல் மனித சங்கிலி போராட்டம் : அதிமுக அறிவிப்பு
போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடியில் மார்ச் 12ல் அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ் வி சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை 12.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு எனது தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அதேபோல் திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார் திருநகரி, சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி, ஆத்தூர், காணம், தென்திருப்பேரை, நாசரேத் ஆகிய பேரூராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட நகர அதிமுக நிர்வாகிகளின் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி, பேரூராட்சி வார்டு, மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.