பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மனித சங்கிலி !
திண்டுக்கல் எம்.வி.எம்.மகளிர் கல்லூரி அருகே என் வாக்கு என் உரிமை மற்றும் 100 சதவீம் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 05:48 GMT
விழிப்புணர்வு
திண்டுக்கல் எம்.வி.எம்.மகளிர் கல்லூரி அருகே என் வாக்கு என் உரிமை மற்றும் 100 சதவீம் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி இயக்கம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலி கல்லூரி மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்போது கலெக்டர் பூங்கொடி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இப்போது நமது கடமை என்பதை மக்கள் உணர வேண்டும். வெயில் அதிகமாக உள்ளது மயக்கம் வரும் என்று கூறி ஜனநாயக கடமையை புறக்கணிக்கக் கூடாது. உங்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.