கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன், மனைவி உயிரிழப்பு
Update: 2023-11-16 03:41 GMT
உடல்களை மீட்கும் பணி
திருச்செங்கோட்டை அடுத்த பன்னீர் குத்தி பாளையம் அருகே உள்ள அண்ணாநகர் சங்கங்காடு பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நீச்சல் பழக சென்ற கணவன் சோமசுந்தரம்,மனைவி மகேஸ்வரி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கிணற்றில் மிதந்த் மகேஸ்வரி சடலத்தை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். சுமார் நான்கு மணி நேரம் போராட்டத்துகு பின் கிணற்று நீரை முழுவதும் இரைத்து வெளியேற்றி சோமசுந்தரத்தின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்