யானை தாக்கி கணவன், மனைவி பலி
பவானிசாகர் அருகே வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற கணவன், மனைவி இருவரையும் காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.;
Update: 2024-01-25 02:50 GMT
பவானிசாகர் அருகே வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற கணவன், மனைவி இருவரையும் காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.
பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்மொக்கை வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற காராச்சிக்கொரை பகுதியை சேர்ந்த கணவன் நஞ்சன் (75) மனைவி துளசியம்மாள் (70) ஆகிய இருவரை காட்டு யானை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர். உடலை மீட்ட வனத்துறையினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.