மனைவியை தாக்கிய கணவர் கைது
கச்சிராயபாளையம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது.;
Update: 2024-03-27 04:26 GMT
காவல்துறை விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 40. இவரது மனைவி சங்கீதா, 28. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மது போதையில் வீட்டிற்கு வந்த ஆறுமுகம் சங்கீதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஆறுமுகம், கிரைண்டர் கைப்பிடியால் சங்கீதாவின் தலையில் தாக்கினார். படு காயமடைந்த சங்கீதா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை நேற்று கைது செய்தனர்.