மனைவியை தகாத வார்த்தை பேசி தாக்கிய கணவன் கைது
மது போதையில், மனைவியை தகாத வார்த்தை பேசி, தாக்கிய கணவன் கைது. காவல்துறை நடவடிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 11:55 GMT
மனைவியை தாக்கிய கணவன் கைது
மனைவியை தாக்கிய கணவன் கைது
கரூர் மாவட்டம் தெற்கு காந்தி கிராமம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராமன் வயது 38. இவரது மனைவி புவனேஸ்வரி. தங்கராமனுக்கு மதுப்பழக்கம் உள்ளதால், மது அருந்திவிட்டு நாள்தோறும் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் ஜனவரி 24ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், மது போதையில் இருந்த தங்கராமன், அவரது மனைவி புவனேஸ்வரியை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, மிரட்டல் விடுத்து துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக புவனேஸ்வரி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையின் முடிவில், இது தொடர்பாக தங்கராமனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.