குழந்தையின்மை காரணத்தால் மனைவியை  அடித்துக் கொன்ற கணவன் கைது.....

மயிலாடுதுறை அருகே மாமா குடியில் திருமண மான மூன்றரை ஆண்டுக்குள் குழந்தை இல்லை என மனைவியை  அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-04-08 11:39 GMT

கைது

மயிலாடுதுறை  அருகே மாமாகுயை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளி.  இவருக்கும் வேப்பஞ்சேரியை அக மற்றசேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் கேசவன் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து கேசவன் மனைவி மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு அருகில் கிடந்த கட்டையை எடுத்து  அடித்ததில்  மகாலட்சுமி மயங்கி விழுந்துள்ளார்.

Advertisement

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில்  இருந்தவர்கள் ஓடி வந்து மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  பொறையார் போலீசார் விரைந்து வந்து  கொலை செய்த கேசவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.மது போதையில் மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News