விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிய கணவர் கைது
தின்னகுட்லான அள்ளியில் விவாகரத்து பெற்ற மனைவியை சேர்ந்து வாழ அழைத்த போது தகராறு மனைவியை வெட்டிய கணவன் கைது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.;
Update: 2024-04-16 04:24 GMT
பைல் படம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகாமையில் அமைந்துள்ளது தின்ன குட்லான அள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார் இவருக்கும் சுமித்திர என்பவருக்கும் திருமணமாகி 11 வயதில் மகன் உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ சுமித்திரவை சிவக்குமார் அழைத்தபோது இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் சுமித்ராவை கொடுவாளால் சிவகுமார் வெட்டியதாக தெரிகிறது. இதனால் சுமித்திர தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து சிவகுமார் கைது சிறையில் அடைந்துள்ளனர்.