தலைவாசல் அருகே குடும்ப தகராறில் கணவன் கிணற்றில் குதித்து தற்கொலை

தலைவாசல் அருகே குடும்ப தகராறில் கணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-29 09:30 GMT

தற்கொலை செய்து கொண்டவர்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் ஏரிக்கரை கிழக்குபகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). தனியார் மருந்து நிறுவன ஊழியர். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை 7.30 மணி அளவில் செல்வகுமார் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

இதைக்கண்ட அவருடைய மனைவி கணவரை காப்பாற்ற அவரும் கிணற்றுக்குள் குதித்தார்.கணவன்- மனைவி இருவரும் அடுத்தடுத்துகிணற்றுக்குள் குதித்ததை கண்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கணவன்- மனைவி இருவரையும் மீட்க முயன்றனர். திலகவதியை மட்டும் மீட்டனர். 108 ஆம்புலன்சு மூலம் அவரை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வகுமாரை தொடர்ந்து தேடினர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்து கிணற்றுக்குள் செல்வகுமாரை தேடினர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு செல்வகுமார் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வகுமார் தற்கொலை தொடர்பாக அவருடைய தந்தை சின்னையன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News