குடும்ப தகராறில் கணவர் துாக்கிட்டு தற்கொலை
திருப்பெரும்புதூர் பகுதியில் கணவர் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் கணவர் துாக்கிட்டு தற்கொலை.;
By : King 24x7 Angel
Update: 2024-01-24 08:48 GMT
குடும்ப தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மதுரமங்கலத்தை அடுத்த, கோட்டூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 38, மனைவி பிரியா, 23. தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளார். குடிபழக்கத்திற்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கணவர் மனைவிககு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனவிரக்தியில் எடையார்குப்பம் சுடுகாடு அடுகே உள்ள வேப்பமரத்தில் முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.