விராலிமலை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
விராலிமலை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-11 15:35 GMT
கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டணம்பட்டி கிராமத்தின் வசிக்கும் பிரபு வயது 33 என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனையில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.