வெளிநாட்டில் கணவர் வேலை: மனைவி தற்கொலை
மயிலாடுதுறை அருகே கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி தேன்மொழி புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
Update: 2024-05-15 10:33 GMT
மயிலாடுதுறை அருகே கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி தேன்மொழி புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மயிலாடுதுறை அருகே உள்ள திருமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த வரதராஜன் மகள் தேன்மொழி இவருக்கும் நக்கம்பாடி சாமிதுரை மகன் பாரதிராஜாவுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே பாரதிராஜா வெளிநாடு சென்று வேலை பார்த்து வருகிறார் தேன்மொழி நக்கம்பாடியில் மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். இன்னிலையில் நேற்று காலை தனக்குத்தானே புடவையால் தூக்கு மாட்டி இறந்து விட்டதாக வரதராஜுக்கு வந்த செய்தியின் அடிப்படையில் அவர் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதில் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பாலையூர் போலீசார் சந்தேகம் மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.