பூச்சாண்டிக்கு அஞ்சுபவன் நானில்லை:எல். முருகன்

தி.மு.க., என் மீது வழக்கு போடவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும் இந்த பூச்சாண்டிக்கு அஞ்சுபவன் நானில்லை எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-30 09:09 GMT

செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் தலைமையில் கூட்டணி கட்சியினர்களுடன் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசியல் முருகன் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற இந்த தேர்தலில் தி.மு.க., வை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றார்.

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: ஊட்டி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பதில் அளித்த அவர், தன் மீது வழக்கு போடவில்லை என்றால் தான் ஆச்சரியம், வழக்கு போட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். மேலும் இது போன்ற வழக்கு பதிவுகளுக் கெல்லாம் அஞ்சும் ஆள் நானில்லை.

பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்கும் போது அதற்கு வழக்கு பதிவு செய்தார்கள் அதை உச்ச நீதிமன்றம் வரை சென்று சந்தித்துள்ளேன். அதனால் இந்த வழக்குகளை எல்லாம் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துள்ளேன் இந்த பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் பா.ஜ.க., அஞ்சாது. ராமநாதபுரத்தில் ஆறு ஓ. பன்னீர் செல்வங்கள் வேற்பு மனு தாக்கல் செய்ததற்கு, நிச்சயமாக தோல்வி பயத்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க.,

தான் காரணம். அந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தான் வெற்றி பெறுவார். மேலும், கூடலூரில் வஞ்சிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. கூடலூரின் சாபம் நிச்சயமாக ஆ. ராசாவுக்கு பதிலடி கொடுக்கும். கடந்த 2009 இல் இருந்து எம்.பி யாக உள்ளார். இந்தப் பகுதியை பற்றி சிறிதும் அக்கறை இல்லை. பழங்குடியினர் கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கூடலூரில் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் அது பா.ஜ.க.,வால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு வைத்துள்ளோம். அதற்காக குழு ஒன்று அமைத்து அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஊட்டியை சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக மாற்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். இரண்டு மலைகளை இணைக்க பாலங்கள் அமைப்பது சுரங்க பாதைகள் மூலமாக ஊட்டி, கோவை , மைசூரை இணைக்கும் போது மிகப்பெரிய சுற்றுலா மையமாக ஊட்டி மாறிவிடும் அதை மாற்றிக் காட்டுவோம்.

அதேபோல் டேன் டீ தோட்ட தொழிலாளர்களுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நான் இருந்தபோது அவர்களின் வேதனை என்னால் நேரில் பார்க்க முடிந்தது. ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை நான் ஆணையத்தில் இருக்கும் போது தலைவரை அழைத்து ஆணை பிறப்பித்த பிறகு ஓய்வூதியத்தை கொடுத்தார்கள்.

நீலகிரி தேயிலைக்கு ஒரு மதிப்பு உண்டு நிர்வாகத்தை நடத்த தெரியாத அரசால் டேன் டீ யில் பணிபுரியும் ஊழியர்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர் என்றால் அதற்கு காரணம் தி.மு.க., தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News