பிரபலங்களுடன் களத்தில் போட்டியிடுவது எனக்கு பெருமை: நாதக வேட்பாளர்

பிரபலங்களுடன் என்னுடைய முதல் அரசியல் களத்தில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது என நாதக விருதுநகர் வேட்பாளர் கௌசிக் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-26 15:04 GMT

நாதக வேட்பாளர் 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேமுதிக, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆகியோர் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்,

இது தொடர்பாக நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் போட்டியிடும் இளம் வயது(26) மருத்துவருமான கௌசிக் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடன் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

கௌஷிக் தென்காசி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் இளங்கலை மருத்துவம் படித்து மருத்துவராக பணியாற்றி வருவதுடன் சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். மேலும்., நாம் தமிழர் கட்சியில் 2023 ஆம் ஆண்டு மருத்துவ பாசறையில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

2024 பாராளுமன்ற தேர்தலில் இவரது சமூக சேவையை கருத்தில் கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக அறிவித்தார். விருதுநகர் தொகுதியைப் பொறுத்தவரை திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர்,

அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. முதல் கட்டமாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் இன்று காலையில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து., சன்னதி தெரு வழியாக 3 ரத வீதிகள் மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளான ஹார்வி பற்றி திருநகர்,

மகாலட்சுமி காலனி, விளாச்சேரி, பசுமலை, ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்றும் அங்காங்கே இருசக்கர வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து., இன்று பிறகு மாலை 7 மணி அளவில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பொதுமக்களிடம் உரையாற்ற உள்ளார். 

தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக் கூறுகையில்,

இளம் வயது மருத்துவரான நான் குறிப்பிட்ட மக்களுக்கு சேவை செய்து வந்தேன்., இப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மூலம் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் அளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மக்களுக்கு சேவை செய்யும் என்பதை எனது நோக்கம்.

நான் புதிதாக வந்தவன் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் இப்போது தயார் நிலையில் உள்ளேன்., நான் ஒரு தமிழன் தான் சொன்னவங்க எந்த ஊர் என்று எனக்கு தெரியல இங்கிலீஷ் பேசினாலும் நான் பக்கா தமிழன். என்னுடைய சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மேலக்கலங்கள் கிராமம். நான் ஒரு தமிழன் தமிழினத்திற்காக போராட வந்துள்ளேன் தமிழ் மொழி ஒன்று தமிழ் இனத்திற்காக போராட வேண்டும் அதற்காக வந்துள்ளேன்.

பிரபலங்களுடன் என்னுடைய முதல் அரசியல் களத்தில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண் இங்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆசியுடன் நிர்வாகிகளின் செயல்பாடுகளில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் அதில் எந்த மாற்றமும் இல்லை.

என்னுடைய உறவினர்கள் சிவகாசி பட்டாசு ஆலை வேலை செய்கிறார்கள் அடிக்கடி விருதுநகர் வருவேன் விருதுநகர் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எனக்கு நன்றாகவே தெரியும் இதுவரை கோரிக்கையாக இருந்த மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் நிச்சயமாக சரி செய்வேன் என்றார்.

Tags:    

Similar News