நான் முதல்வன் கல்லூரிக் கனவு திட்ட ஆலோசனைக் கூட்டம்

நான் முதல்வன் கல்லூரி கனவு திட்டத்தில் மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவுகளை வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்.

Update: 2024-06-01 11:00 GMT

ஆலோசனைக் கூட்டம் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் இயங்கும், அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் கல்லூரி கனவு என்ற திட்டத்தின்கீழ் மேல்படிப்பிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த மே.09 அன்று, சென்னை திறன் மேம்பாட்டு பயிற்சித் துறையின் கீழ் நடைபெற்ற, நான் முதல்வன் கல்லூரி கனவு என்ற திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட அரசு குழந்தைகள் இல்லத்தில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  அப்பயிற்சியில் மாணவர்கள் மேல்படிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளனர்.  மாணவ, மாணவிகளுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை பெற்று வழங்கிட சம்மபந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்  அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் கௌடில்யன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) அசோக், அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் பா. டில்லிராஜ், அன்னை சத்யா குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் அபீதா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News