சையதுகானின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: ஆர்.பி.உதயக்குமார்
சையதுகானின் உருட்டல் மிரட்டலுக்கு அச்ச மாட்டேன், எதற்கும் தயாராக உள்ளேன் என ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் அன்னதான விழாவை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, மதுரை மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி, நோய் தொற்று ஏற்படும் நிலையில் உள்ளது., கலைஞர் நூலகத்திற்குள் மீண்டும் மழைநீர் புகுந்துள்ளது, அதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை, 130 கோடிக்கு மேல் செலவு செய்து திறந்துள்ளனர்., மக்களின் பயன்பாட்டில் இருக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்., தினசரி பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் மார்கெட்-க்கு வருகின்றனர்.
அங்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படை உடனடியாக சரி செய்ய வேண்டும்., ஓபிஎஸ் கழகத்தில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு இன்று பதில் சொல்லப்பட்டு பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.
தேனி சையது கான் நான் அடியாளாக இருந்தேன் என வாய் கூசாமல் ஒரு பொய்யை சொல்லி இருக்கின்றார்., அவருக்கு வரலாறு தெரியும், யாரோ ஒருவரை திருப்தி படுத்த அவ்வாறு சொல்லி இருக்கிறார்., என் வரலாறு, இரண்டாவது தலைமுறையாக கழகத்தில் பணியாற்றி வருகிறேன்., அருமை மாமா சையது கான் எதற்காக இப்படி சொன்னார் என தெரியவில்லை, அல்லது எழுதி கொடுத்ததை வாசித்தாரா என தெரியவில்லை., நான் யாருக்கும் அடியாள் இல்லை, அதோடு மிரட்டும் தோணியில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சொல்லியிருக்கிறார், எந்த விளைவிற்கும் சந்திப்பதற்கு இந்த உதயக்குமார் தயங்குவதும் இல்லை, பின் வாங்குவதும் இல்லை.
இதே மதுரையில் அழகிரி கோலோற்றிக் கொண்டிருந்த போது, எந்த கிராமத்திலும் நுழைய முடியாது என சொன்னார்கள், ஆனால் கிராமம் கிராமமாக சென்று இளைஞர் இளம்பெண்கள் பாசறையை அமைத்து அம்மா இடத்தில் பாராட்டை பெற்றவன்., உருட்டல் மிரட்டலுக்கு அச்ச மாட்டோம்., ஓபிஎஸ் என்பவரது சுயநல எண்ணத்திலிருந்து அதிமுகவை மீட்டெடுப்பதற்கு,
எங்கள் உயிரையும் தியாகம் செய்வதற்கு, பணயம் வைப்பதற்கு தயாராக இருக்கிறோம்., எங்கள் உயிரே போனாலும் அதிமுக காப்பாற்றப்பட்டது, வெற்றி பெற்றது என்ற வெற்றி வரலாற்றிற்காக இன்று பணியாற்றி வருகிறார்கள்., சையது கான் சில கோரிக்கைகள் வைத்தார், ஓபிஎஸ்-கே தெரியாமல் எடப்பாடியாரிடம் சொல்லி செய்து கொடுத்தேன், மீண்டும் இது போன்ற உலரல்கள் வெளியே வருமானால் பல உலரல்கள் உங்களுக்கு பதில் சொல்வதற்கு,
நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் நாங்கள் ஒருநாளும் அஞ்ச மாட்டோம்., எடப்பாடி பழனிச்சாமிக்கு விசுவாச தொண்டர்களாக பணியாற்றுவோம் என்பதை விளக்கம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறோம்., என பேட்டியளித்தார்.,