கரூர் எம்பி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் வெற்றி பெற வைப்போம்- பேங்க் சுப்ரமணி

கரூர் எம்பி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் வெற்றி பெற வைப்போம் என பேங்க் சுப்ரமணி கூறியுள்ளார்.;

Update: 2024-03-10 18:44 GMT
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், வெற்றி பெறவும் பல்வேறு கட்சிகள் வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பேங்க் சுப்ரமணியை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிசான் பிரிவின் இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்து கட்சி அறிவிப்பு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் பேங்க் சுப்பிரமணி. அப்போது, இந்தியா கூட்டணியில் தமிழகம், பாண்டிச்சேரி உள்பட திமுக தலைமையிலான கூட்டணியில் 10 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். கட்சி யாரை நிறுத்தினாலும் நாங்கள் களப்பணியாற்றி வெற்றி பெற வைப்போம் என தெரிவித்தார். தற்போது எம்பி யாக உள்ள ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கக் கூடாது என ஏற்கனவே தெரிவித்தீர்களே என செய்தியாளர் கேட்டதற்கு, இம்முறை நான் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு உள்ளேன். வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News