தமிழ் பல்கலைக்கழகத்தில் இலாவணி சிறப்பு நிகழ்வு !

தமிழ் பல்கலைக்கழகத்தில் இலாவணி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-13 06:30 GMT
இலாவணி நிகழ்ச்சி

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையின் சார்பில், நலிவுற்றக் கலைகள் ஆவணப்படுத்துதல், இலாவணி சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் தலைமை வகித்தார். நாட்டுப்புறவியல் துறை தலைவரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் இரா.காமராசு நோக்கவுரையாற்றினார்.

நாட்டுப்புறவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் சீ.இளையராஜா வரவேற்றார். மொழிப்புலத் தலைவர் ச.கவிதா  வாழ்த்திப் பேசினார்.

இதில் சிறப்பு நிகழ்வாக எழுத்தாளர் தஞ்சை சாம்பான் குழுவினரின், இலாவணி எனும் எரிந்த கட்சி எரியாத கட்சி எனும் நலிவுற்றக் கலைகள் ஆவணப்படுத்துதல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துரையை வழங்கினர்.  நிறைவாக, நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் நா.மாலதி நன்றி கூறினார். 

நாட்டுப்புறவியல் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் இரா.நந்தினி தேவி தொகுத்து வழங்கினார். இதில் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News