சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-28 17:51 GMT
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது. மூலப்பொருட்கள் பறிமுதல்...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆவுடையாபுரம் கிராமத்தில் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக தகர ஷெட் அமைத்து பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின்படி தனி வட்டாட்சியர் மற்றும் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் ஆகியோர் தணிக்கை செய்த போது சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை கைப்பற்றினர்.மேற்கண்ட சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News