மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய புகார் எண் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண்..1077 அல்லது 7092255255 புகார் தெரிவிக்கலாம்
By : King 24X7 News (B)
Update: 2024-06-24 12:29 GMT
. கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 1077 அல்லது 7092255255 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தல். இந்த எண்ணில் மின் விநியோகம், சாலை போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்னைகளையும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.