சட்டவிரோத மது விற்பனை - 11 பேர் அதிரடி கைது

தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-18 05:12 GMT

பைல் படம் 

தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி காவலர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் தர்மபுரி, தொப்பூர், பாலக்கோடு, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 11 பேர் காவலர்களிடம் சிக்கினார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து 11 பேரையும் கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News