சட்டவிரோத மது விற்பனை - 4 பேர் கைது

பள்ளிபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2024-06-23 02:26 GMT

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் இணைந்து அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் பள்ளிபாளையம் அடுத்த பெரியகாடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்ட துரை, மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர், அதேபோல் பெரியார் நகர் பகுதிகளிலும் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக சுப்பிரமணி,மற்றும் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து 150-க்கும் அதிகமான மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்..

Tags:    

Similar News