சட்ட விரோத மது விற்பனை - நான்கு பேர் கைது !

அரவக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-04-02 12:41 GMT

காவல்துறை

அரவக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் சட்ட விரோத மது விற்பனை. நான்கு பேர் கைது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான சின்னதாராபுரம், க. பரமத்தி, தென்னிலை பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, மகாமுனி, சந்திர சேகரன், செந்தில்குமார் ஆகியோர் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் வயது 46 என்பவரும், சின்ன தாராபுரம் தும்பிவாடி, புரவிபாளையம் காலனியை சேர்ந்த ரவி வயது 70, மற்றும் பூலாம்வலசு டாஸ்மாக் கடை அருகே விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பால்ராஜ் வயது 37, வடகனூர் பிரிவு அருகே மது விற்பனையில் ஈடுபட்ட வாங்கலா பாளையம், எல்லமேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 17 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News