வெள்ளையணையில் சட்டவிரோத மது விற்பனை: மது பாட்டில்கள் பறிமுதல்
வெள்ளையணையில் சட்டவிரோத மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
By : King 24X7 News (B)
Update: 2024-04-12 14:57 GMT
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரஷியா சுரேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 11ம் தேதி காலை 9.30 மணி அளவில், வெள்ளியணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, வெள்ளியணை தெற்கு பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பாலநத்தம் பகுதியில் சேர்ந்த ராமசாமி மகன் ரமேஷ் குமார் வயது 40 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக ரமேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.