காற்றில் பறந்த அரசு உத்தரவு - களைகட்டிய மது விற்பனை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-01-17 12:54 GMT

பிளாகில் மது விற்பனை 

திருவள்ளுவர் தினத்தைமுன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, பள்ளபட்டி, இராமராஜபுரம்,விளாம்பட்டி, அணைப்பட்டி, நிலக்கோட்டை, காமபிள்ளைசத்திரம்,செம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி 24-மணி நேரமும், இரு மடங்கு விலை உயர்வில் கள்ளச் சந்தை மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது. மது பிரியர்கள் தங்கு தடை இன்றி மதுக்கடை வாங்கி குடிக்கிறார்கள். திருவள்ளுவர் பிறந்த நாளுக்கு மதுக்கடைக்கு ஏன் விடுமுறை வேண்டும் எனவும் கேள்வி கேட்கிறார்கள்.

பிளாக்கில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பிரதீப், அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இவரின் உத்தரவுகள் காற்றில் பறக்கின்றன.எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News