பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - மேயர் உத்தரவு
Update: 2023-12-13 01:20 GMT
குறைதீர் கூட்டம்
கோவை: மாநகராட்சி பிரதான கட்டிடத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மேயர் கல்பனா ஆனந்த குமார் தலைமையில் நடைபெற்றது.இதில் கூட்டத்தில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்,சாலை வசதி, மின்விளக்கு இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. கிழக்கு,மேற்கு,வடக்கு மத்திய மண்டலங்களில் இருந்து மொத்தம் 48 பேர் அளித்த மனுக்கள் பெறப்பட்டது.பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மேயர் கல்பனா ஆனந்தகுமார் சம்பந்தப்பட்ட மண்டல உதவியாளர் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வ சுரபி,சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.