திருமருகல் அருகே ஹரிஹர புத்திர சாமி கோவிலில் குடமுழுக்கு
நாகை மாவட்டம்திருமருகல் அருகே ஹரிஹர புத்திர சாமி கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம்திருமருகல் அருகே ஹரிஹர புத்திர சாமி கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருமருகல் ஹரிஹர புத்திர சாமி கோயில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி பனங்காட்டூர் கிராமத்தில் பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்ர சாமி கோயில் உள்ளது.இக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி,
கடந்த 11-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,தீபாரதனை அங்குரார்பணம்,யாக பூஜை ஹோமங்கள்,தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 11-ம் தேதி யாக பூஜை ஹோமங்கள்,பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலையாக பூஜை ஹோமங்கள்,மகா பூர்ணாகுதி,தீபாரதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு,
விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.