ஜோலார்பேட்டையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்ய கலெக்டர் உத்தரவு
ஜோலார்பேட்டை பகுதியில் சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் எம்எல்ஏ வட்டம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர்ஜெயபிரகாஷ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் அப்போது கோனேரி குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கோனேரி குப்பம் எம்எல்ஏ வட்டம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் தனது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்ததை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து போலீசார் முரளி மீது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு கள்ள சாராயம் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பெயரில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் முரளி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார் இதனையெடுத்து போலீசார் ஏற்கனவே சிறையில் உள்ள முரளியை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.