கரூரில்,புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூரில்,புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-07-05 06:59 GMT
கரூரில்,புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு அண்மையில் குற்றவியல் சட்டம் தொடர்பாக மூன்று புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியது இந்த சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இல்லாமல் இருப்பதை எதிர்த்தும், வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் புதிய குற்றவியல் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் மண்டல தலைவர் கே. ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,கரூர் வழக்கறிஞர் சங்க செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் கரூர் வழக்கறிஞர் சங்கத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News