கரூரில்,பார் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

கரூரில்,பார் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.

Update: 2024-07-15 06:40 GMT
கரூரில்,பார் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. கரூரில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 12ஆம் தேதி மதியம் 2:45- மணி அளவில், கரூர் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். நகரப் பகுதியில் செயல்படும் சிட்டி பார் அருகே அனுமதி இன்றி மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், கரும்பக்குடி அருகே உள்ள ஊரணிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் மகன் ரவிக்குமார் வயது 43 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5- குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர், ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Tags:    

Similar News