கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரம் !
கரூரில்,கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-18 07:03 GMT
கரூரில்,கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பொது இடங்களில் கட்சி கொடிகளையோ, கட்சி கம்பங்களையோ நிறுவி அதன் மூலம் கட்சிக்கு ஆதாயம் தேடக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளதால், புதிதாக கம்பங்களை நடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, ஏற்கனவே உள்ள கொடி கம்பங்களை அகற்றுவதற்கும் அரசியல் கட்சியினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறியதால், கரூர் மாநகராட்சி பணியாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில், தாந்தோணி மலைப்பகுதியில் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடிக்கம்பங்கள் இரும்பு போல்டுகளால் பிணைக்கப்பட்டு இருந்ததால், அவைகளை கழட்ட முடியவில்லை எனக்கூறி, கேஸ் வெல்டிங் வைத்து அந்த போல்ட்டுகளை அகற்றிவிட்டு, கிரேன் உதவியுடன் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.