கொடைககானலில் உறைபனியால் ரோஜா மலர்கள் கருகின
கொடைககானலில் உறைபனியால் ரோஜா மலர்கள் கருகியது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-01 12:42 GMT
கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரைஉறை பனிக் காலமாக இருக்கும்.தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே பகல் நேரத்தில் 15 டிகிரி முதல் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 7 டிகிரி முதல் 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை உள்ளது.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் உறை பனி நிலவிவருகிறது.
புல்வெளிகள் வெண்மையாகப் பனி படர்ந்து உறைந்து கிடக்கின்றன.பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ரோஜா மலர்கள் கருகி வருகின்றன.
பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஸ் கார்டனில் நிழல் வலையால் தாவரங்களை மூடி தோட்டக்கலைத் துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.