மதுரையில் மது போதையில் போக்குவரத்து காவலர் போன்று போக்குவரத்தை சரி செய்த ஆசாமியால் பரபரப்பு
மதுரை பைபாஸ் சாலையில் மது போதையில் மாநகரப்பகுதியில் போக்குவரத்து காவலர் போன்று போக்குவரத்தை சரி செய்த ஆசாமியால் பரபரப்பு. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-25 10:14 GMT
மதுரையில் மது போதையில் போக்குவரத்து காவலர் போன்று போக்குவரத்தை சரி செய்த ஆசாமியால் பரபரப்பு
மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் வேலை நாட்களின் போது ஏராளமான போக்குவரத்து மிகுந்து காணப்படும் சாலையில் இன்று மாலை அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் போக்குவரத்தை சரி செய்வதாக கூறி போதை ஆசாமி ஒருவர் போக்குவரத்தை அலங்கோலப்படுத்திய காட்சி இது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் தலைக்கேறிய போதையில் வாகனத்தை அங்குமிங்கும் தடுத்து நிறுத்திய போதை ஆசாமி இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அந்த நபரை வீடியோ எடுப்பதை கண்டதும் அங்கிருந்து நைசாக புறப்பட்டு சென்றார்.