தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை பொலிவு !!
குழித்துறை,இரணியல் உட்பட மாவட்டத்தில் இன்றும் கனமழை.கடந்த 3 மாதத்தில் 451.8 மில்லி மீட்டர் மழை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-28 11:06 GMT
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதி முதல் நேற்று வரை கடந்த 3 மாதத்தில் குமரி மாவட்டத்தில் 451.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 281.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் அதிகமான அளவு மழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது.இதுபோல் தக்கலை, இரணியல், கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, திற்பரப்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதி களிலும் விட்டுவிட்டு மழை பெய்ததையடுத்து அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.